செய்திகள்

3 இலங்கையர் தமிழகத்தில் கைது! அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்துபவர்களாம்

தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 இலங்கை தமிழர்களை இந்திய கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 29 வயதான துஷயந்தன், 30 வயதான லிங்கேஸ்வரன் மற்றும் 28 வயதான விஜயராஜ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்யந்தனும், லிங்கேஸ்வரனும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடந்த வருடம் இந்தியாவுக்கு சென்றுள்ளனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தம்மை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி சிலர் ஏமாற்றியதாகவும் இதனையடுத்து பணம் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தமிழகம் வந்து அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாக அவர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.