செய்திகள்

3 மாதங்களில் 68 பேருக்கு எச்.ஐ.வி

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கான 68 பேர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கான ஆண்களில் பலருக்கு ஓரின சேர்க்கை காரணமாகவே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை சிறைச்சாலைகளில் கைதிகள் பலருக்கும் இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இந்த தொற்று தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் கொள்ளுப்பிட்டிய பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட தாய்லாந்து யுவதிகள் இருவருக்கு அந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
n10