செய்திகள்

3 மாதத்தில் 60 பேருக்கு எச்.ஐ.வீ தொற்று : 7 பேர் எயிட்ஸால் இறப்பு

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான 3 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வீ தொற்றுக்கு இலக்கான 60 பேர் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளான 7 பேர் உயிரிழந்தள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

விபச்சரி;கள் மூலமாகவே அதிகமாக எச்.ஐ.வி தொற்றுவதாக தெரிவித்துள்ள பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு தாம் மேற் கொண்ட ஆய்வுகளின் படி 1000 விபச்சாரிகளில் 10 பேருக்காவது எச்.ஐ.வி தொற்று இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் முதல் 3 மாதக்காலப் பகுதியில் இனங்காணப்பட்ட எச்.ஐ.வீ தொற்றுக்குள்ளானோரில் 60 வீதமானவர்கள் 25 முதல் 45 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அந்த பிரிவு தெரிவித்;துள்ளது.

இந்நிலையில் எச்.ஐ.வீயின் தாக்கம் தொடர்பாக விபச்சாரிகள் , ஓரின சேர்க்கையாளர்கள் , கடற்கரையேர சிறுவர்கள் (பீச் போய்ஸ்) போன்ற எச்.ஐ.வீ தொற்று அதிகம் தாக்கும் அபாயமுள்ள பிரிவினரை தெளிவு படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.