செய்திகள்

3-வது டெஸ்ட்: திமுத் சதத்தால் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 272 ரன்கள்

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று பல்லேகலேயில் தொடங்கியது. இதில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பை தெரிவு செய்தது..

அதன்படி இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன- கவுசல்சில்வா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சில்வா 9 ஓட்டங்களை எடுத்த நிலையில் ரஹத் அலி பந்தில் ஆட்டம் இழந்தார்.அடுத்து தரங்கா களம் இறங்கினார். இருவரும் விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடினர். இலங்கை அணியின் ஸ்கோர் 106 ஆக இருக்கும்போது இந்த கூட்டணி பிரிந்தது. 46 ரன்களில் தரங்கா ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த இலங்கை வீரர்களை யாசீர் ஷா வரிசையாக பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.

இதனால் இலங்கை அணி தத்தளித்தது. ஆனால் நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் கருணாரத் சதம் அடித்தார். அவர் 130 ரன்களில் அசார் அலி பந்தில் ஆட்டம் இழந்தார்.இவரது துணையால் இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்களை எடுத்துள்ளது.பாகிஸ்தான் அணி தரப்பில் யாசீர் ஷா 4 விக்கெட்டும் ரஹத் அலி அசார் அலி தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.