செய்திகள்

3 வருடங்களுக்கு முன்னர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் நேற்று கைது

மூன்று வருடங்களுக்கு முன்னர் சிறுமியொருவரை பாலியல துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் 50 வயது நபரொருவர் மாதம்பை பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசத்தின் பாடசாலையொன்றில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்ட நிலையில் 11ஆம் தரத்தில் கற்கும் 16 வயது சிறுமியொருவர் தனக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த துஷ்பிரயோக சம்பமொன்று தொடர்பான ஞாபகத்தை மீட்டியுள்ளதுடன் அவர் வீட்டுக்கு சென்று அளவுக்கதிமான வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட போது மூன்று வருடங்களுக்கு முன்னர் வீட்டுக்கு அருகில் உள்ள தாத்தா ஒருவர் தன்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி சம்பம் தொடர்பாக வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகத்தில் 50 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 n10