செய்திகள்
3 வேடங்களில் கலக்கப்போகும் சிவகார்த்திகேயன்
இயக்குநர் அட்லீயிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் வயதானவர், வாலிபர் மற்றும் பெண் வேடம் என மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களை விட, மிக அதிகமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




