செய்திகள்

30 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து! சாரதி படுகாயம் (படங்கள்)

தம்புள்ளையிலிருந்து வெலிமடை கெப்பட்டிப்பொல பகுதிக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை கடவளை பகுதியில் வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10.04.2015 அன்று அதிகாலை 4.30 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும் சாரதிக்கு தூக்கமின்மை காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

DSC08133

DSC08135

DSC08137

DSC08139

DSC08140

DSC08143