செய்திகள்

30 வருடங்களாக புனரமைக்கப்படாமலிருக்கும் வலி.தெற்கு புளியடி வீதி (படங்கள்)

சுமார் 500 மீற்றர் நீளமான குறித்த வீதி அமைந்துள்ள பிரதேசத்தில் பொதுமக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்றனர். வீதி புன்னாலைக்கட்டுவன்-கட்டுவன் பிரதான வீதியையையும் இணைப்பதால் நாள்தோறும் பெருமளவானோர் பயன்படுத்தி வருகின்றனர்.பல வருடங்களாகத் திருத்தப்படாததன் காரணமாக குன்றும் குழியுமாக மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதன் காரணமாகப் பாடசாலை செல்லும் மாணவர்கள்,முதியவர்கள்,நோயாளர்கள்,வாகனச் சாரதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர்.

இந்த வீதி மோசமான நிலையில் காணப்படுவதால் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்சினைக்கு அனுமதி பெறப்பட்டு வைக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தாங்கிக்கு நீர் விநியோகிக்கும் பவுசர் செல்ல முடியாமலிருப்பதால் கிராம மக்கள் குடிநீரைப் பெறுவதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் இந்த வீதியை அறவே பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வீதியின் மோசமான நிலை தொடர்பில் பல தடவைகள் குறித்த பகுதி மக்களால் பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.எனவே குறித்த வீதியை உடனடியாகப் புனரமைத்துத் தர வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
யாழ்.நகர் நிருபர்-

IMG_3323 IMG_3324 IMG_3331 IMG_3334