செய்திகள்

300 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்து – இருவா் பலி இருவா் காயம்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனா்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பொகவந்தலாவ அட்டன் பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்,மகள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு முச்சக்கரவண்டி சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மேலும் இதில் பயணித்த குறித்த தாயின் தங்கையான மற்றொரு பெண் சிறுகாயங்களுக்குள்ளாகி மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வைத்தியா்கள் தெரிவித்தனா்.

இவ்விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

குறித்த முச்சக்கரவண்டி வேகமாக சென்றுள்ளதாகவும் முன்னால் வந்த பஸ் வண்டி ஒன்றுக்கு இடம்கொடுப்பதற்காக இடமளிக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 இவ்வாறு உயிரிழந்தவா்கள் அட்டன் மல்லியப்பு பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் மகளான ஏ.சந்திரகுமாரி (வயது 70), தம்மிக்கா வயது (48) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

 கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்ற உறவினரை பார்க்க சென்று மீண்டும் வீடு திரும்பியபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனா்.

 முச்சக்கரவண்டியில் சாரதியோடு 3 பேர் அதாவது உயிரிழந்த தாய்,மகள் மற்றும் தாயின் தங்கை ஆகியோர் பயணித்துள்ளனா்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

Mother & Daughter

DSC08061

DSC08056

DSC08037

DSC08033

DSC08028

vlcsnap-2015-03-31-20h36m19s19