செய்திகள்

300 குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி பலி

வடஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைகடலை கடக்க முயன்ற 300 ற்கும் மேற்பட்ட சட்ட விரோத குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்;ளன

.பாரிய அளவிலான துயரம் நிகழ்ந்துள்ளதாக யுன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.பாதுகாப்பை தேடிப்புறப்;படுபவர்களுக்கு கடலில் உள்ள ஆபத்தை இது புலப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வடஆபிரிக்காவிலிருந்து நான்கு சிறிய படகுகளில் பயணம் செய்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
இத்தாலிய கடலோர காவற்படையினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஓன்பது பேரை மீட்டுள்ளனர். இவர்கள் 100ற்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்த இரு படகுகளில் இருந்தாக தெரிவித்துள்ளனர்.

இரு நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி இவர்கள் அவதியுற்றுள்ளனர்.
குறிப்பிட்ட படகுகள் லிபியாவிலிருந்து புறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.