செய்திகள்

3,154 தன்னியக்க துப்பாக்கிகள் மீட்பு: மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் பற்றிய விசாரணை தொடர்கிறது

காலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் இருந்து 3,154 தன்னியக்க, தன்னியக்கமற்ற துப்பாக்கிகளும் 7,47,000  துப்பாக்கி ரவைக ளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இது குறித்த விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றே இந்த ஆயுதங்களை கொண்டுவந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள் ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் விசேட ஊடகவியலாளர் மாநாடு பொலிஸ் தலைமை யகத்தில் நடைபெற்ற போதே  போதே பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“காலி கடற்பரப்பில் சட்டவி ரோதமான முறையில் ஆயுதங்கள் கொண்டுவரப்ப டுவதாக காலி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி கப்பலை முற்றுகையிட்ட பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவினர், கப்பலில் இருந்து 3,154 தன்னியக்க, தன்னியக்கமற்ற துப்பாக்கிகளும் 7,47,000 துப்பாக்கி ரவைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தக் கப்பலானது கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் அனுசர ணையுடன் கடந்த 2012 செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் அனுமதியுடன் செயற்பட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன மொன்றே இந்த ஆயுதங்களை கொண்டு வந்துள்ள தாகவும் இந்நிறு வனமானது கொழும்பில் தலைமையகத் தையும், காலியில் கிளை அலுவலக மொன்றுடனும் செயற்பட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணைகள் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.