செய்திகள்

33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது

33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 5 கடத்தல்காரர்களும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.(15)