செய்திகள்

33 வருடங்களுக்கு முன் நடந்த அரந்தலாவ பிக்குகள் கொலை தொடர்பாக விசாரணைக்கு சட்டமா அதிபர் உத்தரவு

1987 ஆம் ஆண்டில் அரந்தலாவயில் நடந்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் அந்த விசாரணை அறிக்கையை தனக்கு கையளிக்குமாறும் சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்குமாறு அவர் அறிவித்துள்ளார்.
1987 ஜூன் 2ஆம் திகதி 34 பௌத்த பிக்குகள் அரந்தலாவ பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அதன்போது அங்கிருந்து 12 பிக்குகள் தப்பியிருந்ததாகவும் கூறப்படுவதுடன் அவர்களில் ஒருவர் கடந்த ஜுன் மாதத்தில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)