செய்திகள்

இ. தொ. காவின் உப தலைவர் வரதபாண்டி ரமேஷ் மத்திய மாகாண அமைச்சராக நியமனம்

மத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, தமிழ் கல்வி, இந்து கலாசார மற்றும் நன்னீர் மீன்பிடி துறை அமைச்சராக  மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வரதபாண்டி ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அமைச்சை பொறுப்பேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு 02.07.2015 அன்று வியாழக்கிழமை கண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், இ.தொ.கா மத்திய மகாணா சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தா்களும் கலந்து கொண்டனர்.

DSC_0134 DSC_0147