செய்திகள்

37 வருடங்களின் பின் ஜனநாயக சுதந்திரத்துக்கு வெற்றி கிடைத்தது : அரசாங்கம்

19வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமை 37 வருடங்களின் பின்னர் ஜனநாயக சுதந்திரத்திரத்துக்கு  கிடைத்த பெரும் வெற்றியென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
உருவாக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க நடவடிக்கையெடுப்பதாக அதன் பின்னர் வந்த சகல அரசாங்கங்களும் தெரிவித்து வந்த போதும் 37 வருடங்களாக அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக 18வது திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் அதரிகாரங்களை அதிகரித்துக்கொள்ளும் செயற்பாடுகளே நடந்ததுள்ளது.
இந்நிலையில் 2015 ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று முறையை நீக்க நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்திருந்தார் அதன் பிரகாரம் தற்போது 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விடயமானது 37 வருடங்களின் பின்னர் ஜனநாயக சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகின்றது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.