செய்திகள்

தாஜுதின் கொலை விவகாரம் : தொலைபேசிகள் மூலம் முக்கிய தகவல்கள் வெளியாகின

கையடக்க தொலைபேசி அழைப்புகள் சிலவற்றை அடிப்படையாக கொண்டு வசீம் தாஜுதினின் மரணம் தொடர்பாக முக்கிய தகவல்கள் பலவற்றை குற்றப் புலனாய்வு பிரிவினர் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 4 கையடக்க தொலைபேசிகளை அடிப்படையாக கொண்டு தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொலைபேசிகள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியவையென கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
n10