4ஆவது நாளாக உண்ணாவிரதமிருக்கும் வீரவன்ச : உடல் நிலையில் பாதிப்பு இல்லையாம்
அரச வாகனங்களை மோசடியான வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 75 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவின் பிணை மனு கோரிக்கை தொடர்ச்சியாக நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை முதல் சிறைக்குள் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். இதன்படி இன்றைய தினம் 4ஆவது நாளாகவும் அவரின் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் நேற்று காலை வீரவன்ச சிறைச்சாலை வைத்தியர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இவரின் உடல் நிலையில் பாதிப்புகள் கிடையாது என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை தமது தந்தை சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் வீட்டில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டமையினால் நோய் வாய்ப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து மகன் சிகிச்சை பெற்று அன்றைய தினமே வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய போதும் மகள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையிலேயே வீரவன்சவின் மகளின் நிலைமையை கருத்திற்கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் தரப்பு சட்டத்தரணியினால் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




