செய்திகள்

4 இந்திய கப்பல்கள் திருமலைக்கு வருகை: இலங்கையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி

இந்திய கடற்படைக்குச் சொந்தமான நான்கு கடற்படைக் கப்பல்கள் நேற்றுக் காலை 8.00 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை கடற்படையுடன் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வந்துள்ள நான்கு கப்பல்கள் எதிர்வரும் 30ம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் இந்திக தெரிவித்தார்.

டி.ஐ.ஆர். (TIR), கேசரி (KESARI), வருணா (VARUNA), மற்றும் சுதர்சினி (SUDARSHINI) ஆகிய இந்திய கடற்படை கப்பல்களே திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை கடற்படையினருடன் தொழில் பயிற்சிகள் மற்றும் கலாசாரம், விளையாட்டு தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட வுள்ளன.

இவ்வாறான பயிற்சிகள் கடந்த 2013 ல் ஏப்ரல் மாதம் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்டது. முதல் பயிற்சியின் போது ஆறு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், கடற்படை அதிகாரிகளுக்கு கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன.