செய்திகள்

4 மாதத்தில் அரசாங்கம் பெற்றுள்ள கடன் தொகை 684,253 மில்லியன் ரூபாவாம்

இந்த வருடத்தில் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளக் கூடிய கடன் வரையான 17 இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபாவில்  முதல் நான்கு மாத காலப் பகுதியில் அரசாங்கம் 6 லட்சத்து 84 ஆயிரத்து 253 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டுக்காக அரசாங்கம் பெற்றுக்கொள்ளக் கூடிய கடன் தொகையாக 17 இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா காணப்படுகின்றது. அவற்றில் கடந்த ஏப்ரல் 30ம் திகதி  வரையான காலப்பகுதியில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 253 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில்  உள்நாட்டு கடனாக 5 இலட்சத்து 26 ஆயிரத்து 204 மில்லியன் ரூபாவும் , வெளிநாட்டு கடனாக ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 49 மில்லியன் ருபாவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.