செய்திகள்

4 வது நாளாக தொடரும் கவிஞர் தாமரையின் உண்ணாவிரத போராட்டம்!

கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி   காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை அவர்கள்.  நான்காவது  நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்..

நேற்று முதல் தனது போராட்டத்தை திரு.தியாகு அவர்களின் வேளச்சேரி வீட்டு முன்பு தொடர்கிறார்..

சில மாணவர் அமைப்புகள் இன்று மாலை தன்னை சந்தித்து ஆதரவு தர இருப்பதாகவும், தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார் .