செய்திகள்

4 வயது சிறுமியை அடித்த தாய் விளக்கமறியலில்

4வயது சிறுமியை அடித்து துன்புறுத்திய தாயை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் ஜ.பீ.டீ.லியனகே உத்திரவிட்டுள்ளார்.

நோர்வூட் போற்றி தோட்டத்தில் 4 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாக நோர்வூட் பொலிஸில் சிறுமியின் தாயார் மீது முறைபாடு பதியப்பட்டதையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸார் திங்கட்கிழமை அன்று கைது செய்து அட்டன் நீதவான் ஜ.பீ.டீ.லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தும் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

ரமேஷ்ராஜா சௌமியா என்ற இந்த சிறுமி வீட்டில் குழப்பம் செய்வதன் காரணமாக இவ்வாறு துன்புறுத்தலுக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் செய்த விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

காலில் அடிப்பட்ட சிறுமி நடக்கமுடியாதளவில் இருக்கும் போது தோட்டத்தில் இருக்கின்ற சிறுவர் பாராமரிப்பு நிலையத்தின் பொறுப்பாளர் நோர்வூட் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து நோர்வூட் பொலிஸார் சிறுமியை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்திருந்தமை குறிப்பிடதக்கது.Norwood Police (9)