4 கோடி சம்பளம் கேட்க்கும் நயன்தாரா!
தமிழ், தெலுங்கு பட உலகில் ரசிகர்கள் ரசனை மாறி இருக்கிறது. காதல், அதிரடி படங்களுக்கு மவுசு குறைந்து பேய், திகில் படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. வசூலிலும் இந்த படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. 50-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பேய் படங்களில் நடிப்பதற்கு நயன்தாரா டைரக்டர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். இவர் நடித்த மாயா பேய் படம் கடந்த வருடம் வெளியாகி வசூலில் சாதனை நிகழ்த்தியது. இதில் பேய் வேடத்தில் நயன்தாரா மிரட்டி இருந்தார். சூர்யாவுடன் மாஸ் என்ற பேய் படத்திலும் நடித்தார்.
அத்துடன் அவரது நடிப்பில் கடந்த வருடம் வெளி வந்த தனி ஒருவன், நானும் ரவுடிதான் படங்களும் வசூல் அள்ளின. இதனால் நம்பர்-1 இடத்தில் வலுவாக தொடர்கிறார். சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி இருக்கிறார். தற்போது திருநாள், இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன், மற்றும் தெலுங்கில் ஒரு படம் கைவசம் உள்ளன. தெலுங்கு இயக்குனர் ஒருவர் சமீபத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அணுகினார்.
அந்த படத்தில் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளத்தை கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார் என்று தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். அதில் நடிப்பதற்கு நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஒதுக்கி விட்டு வேறு நடிகையை தேடினார்கள்.
தற்போது அந்த படக்குழுவினர் நயன்தாராவுக்கு பதில் அஞ்சலியை தேர்வு செய்து இருக்கிறார்கள். அஞ்சலி ஏற்கனவே தெலுங்கில் வந்து வெற்றிகரமாக ஓடிய கீதாஞ்சலி என்ற பேய் படத்தில் நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே பிரபல நடிகையாகவும் இருக்கிறார். சம்பளமும் ரூ.1 கோடிக்கு குறைவாக வாங்குவதாகவே கூறப்படுகிறது.
இதனால் நயன்தாராவை சுற்றிய பேய் கதை இயக்குனர்கள் அவர் சம்பளத்தை உயர்த்தியதால் அதிருப்தியாகி தற்போது அஞ்சலி பக்கம் தாவி அவரை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். நயன்தாராவுக்கு போட்டியாக அஞ்சலி மாறி வருவதாக தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
N5




