4 செயற்பாடுகள் மூலமாக அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றது: மங்கள சமரவீர
புதிய அரசாங்கம் நான்கு கோபுரங்களின் ஊடாக நல்லிணக்க செயற்பாடுகளைக் கட்டியெழுப்பி வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றிய பின்னர் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்த அமைச்சர், வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
உண்மையை அறிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துதல், நியாயத்தை நிலைநாட்டுவதற்கான தேவை, இழப்பை ஈடுசெய்தல் மற்றும் மீள ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய நான்கு விடயங்களின் ஊடாக நல்லிணக்க செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
R-06




