செய்திகள்

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகங்களின் உரிமம் இரத்து!

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகங்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், உண்டியல் வடிவில் பணத்தை கொண்டு வந்த பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டத்தில் தொழிலாளர் அமைச்சின் செலவீனங்கள் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார.

-(3)