செய்திகள்

40,000 பேர் புத்தாண்டுக்கு சொந்த ஊர் திரும்ப முடியாது மேல் மாகாணத்திற்குள் சிக்கினர்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக தமது சொந் த இடங்களுக்கு திரும்ப முடியாது 40,000 பேர் வரையிலானோர் மேல் மாகாணத்திற்குள் சிக்கியுள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் இவர்கள் தமது சொந்த ஊர் செல்வதற்கு திட்டமிட்டிருந்த போதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு சில நாட்களின் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் அவர்களால் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தங்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்ற போதும் மேல் மாகாணம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது சிக்கலானது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்களை தற்போது இருக்கும் இடங்களிலேயே இருக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாது சிக்கியுள்ளனர்.
-(3)