செய்திகள்

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தைக் கென்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனை

43 ஆவது தேசிய விளையாட்டுப் பொட்டியில் இடம்பெற்ற தைக் கென்டோ போட்டியில் கிளிநொச்சி பெண் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு, ரொறின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய் கிழமை (05.09) நடைபெற்ற 43 வது தேசிய விளையாட்டு விழாவில் தைக் கென்டோ போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர். தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டார்.

இவர் மேல் மாகாணத்தை சேர்ந்த வீராங்கனையுடன் 28:17 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி ஈட்டிக் கொண்டார். விளையாட்டு திணைக்களத்தினால் தேசிய ரீதியாக திறந்த முறையில் நடந்த படும் மாஷல் ஆட் (வீர விளையாட்டு) போட்டிகளில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்கள் நீண்ட காலம் தங்கப்பதக்கம் பெறவில்லை என்பதும், பெண்கள் தரப்பில் தேசிய ரீதியிலான மாஷல் ஆட் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற தமிழ் பெண் ஆர்.தமிழ்மகள் ஆவார்.

IMG_8052

IMG_8057

N5