செய்திகள்

44 தமிழக மீனவர்களுக்கும் தொடர்ந்து விளக்கமறியல் : மன்னார் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக முறையில் நுழைந்து கடற்றொழிலில் ஈடபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 44 தமிழக மீனவர்களை இன்று வியாழக்கிழமை (24) மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியபோது குறித்த மீனவர்கக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி வரை விளக்க மறியலை நீடித்து மன்னார் மாவட்ட பதில் நீதவான் கயஸ் பல்டானோ உத்தரவிட்டார்.
எல்லை தாண்டிய குற்றசாட்டில் இலங்கை கடற்பரப்பினுள் வௌ;வேறு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஊடாகவும், பொலிசாருக்கூடாகவும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் பொலிசார் 23 தமிழக மீனர்களையும் அதேபோன்று கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் 21 தமிழக மீனவர்களையும் மன்னார் நீதிமன்றில் முற்படுத்தியபோது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
 இதன்படி இன்று குறித்த 44 தமிழக மீனவர்களையும் மீண்டும் மன்னார் நீதிமன்றில் முற்படுத்தியபோதே குறித்த உத்தரவை மன்னார் மாவட்ட பதில் நீதவான் பிறப்பித்ததுடன் வயது குறைந்த சிறுவர் தொழிலாளர்ககளை சிறுவர் இல்லத்தில் வைக்குமாறு உத்தரவிட்hர்.
n10