செய்திகள்

44 தமிழக மீனவர்களுக்கு ஏப்ரல் 18வரை விளக்கமறியல் நீடிப்பு

மன்னார் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படைகளால் கைதுசெய்யப்பட்டு மன்னார் கடற்தொழில் திணைக்களம் மற்றும் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி இந்திய இலுவைப்பகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 44 தமிழக மீனவர்கள் வௌ;வேறு தினங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடமும் மன்னார் பொலிசாரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு 21 தமிழக மீனவர்களுக்கு எதிராக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தனித்தனியாக மூன்று வழக்குகளையும் 06 சிறுவர்கள் உட்பட 23 இந்திய மீனவர்களுக்கு எதிராக மன்னார் பொலிசார் ஒரு வழக்கையும் தாக்கல் செய்து இவ் 44 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான வழக்கு இன்று திங்கள் கிழமை (04.04.2016) மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுக்கப்பட்போது மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh இவர்களில் 06 சிறுவர்களையும் மன்னார் சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் ஏனையோரை தொடர்ந்து 18.04.2016 விளக்கமறியலில் வைக்கும்படி கட்டளை பிறப்பித்தார்.
 n10