செய்திகள்

450 சட்ட விரோத குடியேற்றவாசிகளுடன் இதாலிக்கருகில் கப்பல் மீட்பு

சட்டவிரோத குடியேற்றவாசிகள் 450 பேருடன் விடப்பட்ட கப்பலொன்று இத்தாலிக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளது.

ஏசடீன் எனும் கப்பல் சியாரோலியோன் கொடியுடனான கப்பல் இத்தாலிய கடற்பகுதியிலிருந்து 40 கடல்மைல்தொலைவில் 450பேருடன் தத்தளித்துக்கொண்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கப்பல் துருக்கி துறைமுகமொன்றிலிருந்து புறப்பட்டதாகவும், மாலுமிகள் இத்தாலி கடற்பகுதியில் கப்பலை கைவிட்டுவிட்டு தப்பிசென்றுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வார காலத்திற்குள் மாலுமிகளால் கைவிடப்படும் இரண்டாவது கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.