செய்திகள்

தனியார் வைத்தியசாலைகளில் சோதனை கட்டணமாக 2000 ரூபாவுக்கு மேல் அறவிட முடியாது

தனியார் வைத்தியசாலைகளில் மருத்துவர் சோதனை கட்டணம் 2000 ரூபாவுக்குள்ளேயே அறவிடப்பட வேண்டுமெனவும் அதற்கும் அதிகமாக அறவிடப்படும் வைத்தியசாலைகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலைகளில் மருத்துவர் சோதனை கட்டணத்தை வரையரை செய்தவற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 2000 ரூபாவுக்குள்ளேயே கட்டணம் அறிவிடப்பட வேண்டும். இதற்கும் மேல் அறவிடப்பட்டால் நடவடிக்கையெடுக்கப்படும்.  என அவர் தெரிவித்துள்ளார்.
n10