செய்திகள்

5 நிமிடத்தில் 4 மசோதா நிறைவேற்றம்

இமாச்சல பிரதேச சட்டசபையில் 5 நிமிடத்தில் 4 மசோதாக்களை நிறைவேற்றி சாதனை படைத்தனர் எம்எல்ஏ.,க்கள் . அதிலும் இவர்களுக்கான சம்பள உயர்வு மசோதா என்பதால் பெரும் ஆர்வம் காட்டினர்.

சமீபத்தில் தெலுங்கானாவில் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களுக்கான சம்பள உயர்வு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இந்த ஆசை காங்., ஆளும் இமாசல பிரதேசத்தில் தொற்றி கொண்டது. இமாசல சட்டசபை கூட்டத்தில் சம்பள மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எவ்வித விவாதமும் இல்லாமல் 5 நிமிடத்திற்குள் நிறைவேற்றி முடிந்தது.
இந்த மசோதா மூலம் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்கள் சம்பளம் மற்றும் படி விர்ரென 60 சதவீதம் எகிறி போகும்.

எம்எல்ஏ.,க்களுக்கான மாத சம்பளம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரமாக உயரும். நாள் ஒன்றுக்கு படி 1,500 லிருந்து 1,800 ஆக கிடைக்கும். பென்சன், 22 ஆயிரத்திலிருந்து 36 ஆயிரமாக உயரும்.
முதல்வருக்கான சம்பளம் ரூ. 65ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரமாகவும், மாத அலவன்ஸ் 50 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாகவும், அமைச்சர்களுக்கான சம்பளம் 50 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாகவும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மாத அலவன்ஸ் 30 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

N5