செய்திகள்

5 மீனவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை: இந்திய அமைச்சர் உறுதி

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர கால்வாய் வழித்தடங்களை ஹெலிகாப்டர் மற்றும் ஹோவர்கிராப்ட் கப்பலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், இலங்கை நீதிமன்றம் மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பத்தினரை மண்டபத்தில் அவர் சந்தித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தைப் பொறுத்தவரை, ராமர் பாலத்தை இடிக்காமல் நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்காக நான்கைந்து மாற்று வழிகளை நாங்கள் வைத் திருக்கிறோம். சேது சமுத்திர திட்ட வழித்தடங்களை ஹெலிகாப்டர் மற்றும் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் ஆய்வு செய்தேன். இந்த ஆய்வு அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்த பின்னர் முடிவெடுக்கப்படும்.

இலங்கையில் தமிழக மீனவர் களுக்கு தூக்கு தண்டனை விதிக் கப்பட்டது வேதனைக்குரியது. 5 மீனவர்களையும் மீட்க வெளியுறவுத் துறை சார்பில், கொழும்பில் உள்ள இந்திய தூதர் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அமைச்சரின் ஆய்வின்போது மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சேது சமுத்திரத் திட்டத் தலைவர் அதுல்யா மிஸ்ரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட் கரியை சந்திக்க தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும் பத்தினர் மண்டபம் கடற்படை முகாமுக்கு வந்திருந்தனர்.

ஆனால் கடற்படை வாயில் காவலர்கள் மீனவர்களின் குடும் பத்தினரை சந்திக்க அனுமதிக்க வில்லை. இதனால் மழையில் நனைந்தவாறு செய்வதறியாது மீனவர்கள் நின்று கொண்டிருந் தனர். பின்னர் தகவல் அறிந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீனவக் குடும்பங்களை மத்திய அமைச்ச ரிடம் அழைத்துச் சென்றார்.