செய்திகள்

5 தமிழ் இளைஞர்கள் பிரித்தானியாவில் கடலில் முழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

பிரித்தானியாவின் எசக்ஸ் கடலில் குளிக்கச் சென்ற 5 ஈழத்து தமிழ் இளைஞர்கள் நேற்று புதன்கிழமை நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடலில் குளிக்க சென்ற இவர்கள் காணாமல் போனதை அடுத்து ஹெலிஹொப்ட்டர்கள் மற்றும் படகுகள் மூலம் இவர்களை தேடும் முயற்சி நடைபெற்றதுடன் கடற்கரை பகுதிக்கு விரைந்த போலீசாரும் மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். சுமார் பிற்பகல் 2.15 மணியளவில் இவர்களில் மூவர் கடலில் இருந்து மீட்கப்பட்ட சிறிதுநேரத்தில் பின்னர் முதலுதவி சிகிற்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். ஏனைய இருவரது உடல்களும் பொதுமகன் ஒருவரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

20 க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இந்த 5 நண்பர்களும் லண்டலில் இருந்து நேற்றைய வெயில் நாளன்று இந்த கடலுக்கு குளிப்பதற்கு சென்றுள்ளனர். இவர்களில் நால்வர் நிதர்சன் ரவி (22), இந்துசன் சிறி , ஹெனிகன் நாதன் (19), கோபி  நாதன் (22) குருசாந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிபவர்கள்.

இவர்களுடன் 6 பேர் இருந்ததாக முதலில் கூறப்பட்டதை அடுத்து தேடுதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் 5 பேர் தான் என்று பின்னர் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து தேடுதல் பனி நிறுத்தப்பபட்டது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=hyyeOV-SZ6I” width=”500″ height=”300″]

nitharsan-pixel

                                                                        நிதர்சன் ரவி

Camber-634119

                                                                          ஹெனிகன் நாதன்

Kurushanth-Anna-and-Nitharshan-Ravi-634082

                  குருசாந்த் (வலது) மற்றும் நிதர்சன ரவி ஆகியோர் தமது நண்பர்களுடன்

Camber-633689 Camber-633690