செய்திகள்

50 அடி பள்ளத்தில் விழுந்து துவிச்சக்கரவண்டி விபத்து! இரு இளைஞர்கள் படுகாயம்

டிக்கோயா பட்டல்கலை தோட்டத்தில் நடைபெற்ற திருவிழா ஒன்றுக்கு போடைஸ் பகுதியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வந்த இரண்டு இளைஞர்கள் பட்டல்கலை தோட்ட பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து பலத்த காயங்களுடன் பொது மக்களின் உதவியுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் 11.05.2015 அன்று இரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.