55 பயணிகளுடன் எகிப்து நாட்டு விமானத்தை தீவிரவாதி கடத்தினான்: சைப்ரஸில் அவசரமாக தரையிறக்கம்
எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை தீவிரவாதி கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55 பயணிகளும், விமானி உள்பட ஏழு பேரும் இருந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில் உள்ள லர்னாகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள நிலையில் விமானத்தை கடத்தியவன் தனது இடுப்பில் வெடிகுண்டுடன் கூடிய பெல்ட்டை கட்டியுள்ளதாகவும், எனவே, தரையிறக்கப்பட்ட விமானத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் சைப்ரஸ் விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அந்த விமானத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் மட்டும் வெளியே செல்ல கடத்தல்காரர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இந்த கடத்தல் பற்றிய விரிவான இதர தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.




