செய்திகள்

6 மாதங்களின் பின்னர் பஸில் பாராளுமன்றம் சென்றார்

முன்னாள்பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ 6 மாதங்களுக்கு பின்னர் இன்று பாராளுமன்றத்துக்கு சென்று சபை நடவடிக்கைகளில் கலந்துக்கொண்டுள்ளார்.

பிற்பகல் பகல் 1.55 மணியளவில் அவர் சபைக்கு வருகை தந்தப்போது அங்கிருந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசைகளில் தட்டி அவரை வரவேற்றதுடன் அவர் அருகில் சென்று வாழ்த்துக்களையும் கூறினர்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த வாரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.