செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பதுளை, களுத்துறை, கண்டி, இரத்தினப்புரி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் மிக்க பகுதிகளில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.