செய்திகள்

6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கட்டுப்பாடு!

கொவிட் தொற்று மீண்டும் தமது நாட்டுக்குள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் 6 நாடுகளில் இருந்து தமது நாட்டுக்குள் பயணிகள் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி சீனா, ஹொங் கொங், ஜப்பான், தென்கொரியா, சிங்கபூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டுபாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளில் இருந்து வருவோர் தமக்கு கொவிட் இல்லை என்பதனை உறுதிப்படுத்தும் வகையிலான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்ககப்பட்டுள்ளது.

-(3)