செய்திகள்

6.21 க்கு புதிய ஜனாதிபதியாக மைத்திரி பதவியேற்றார்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று மாலை சுபநேரமான 6.21 க்கு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். சத்தியப் பிரமாண நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள அவர் மறுத்துவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ன, எம்.கே.டி.எஸ். குணவர்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.