சுவாதி காதலை மறுத்ததற்கு என்ன செய்திருக்க வேண்டும்- வைரலாகும் R.J பாலாஜியின் ஐடியா
கடந்த இரு வாரங்களாக இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் மென்பொறியாளர் சுவாதியின் படுகொலை.
சுவாதி காதலை மறுத்தது தான் இந்த கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது. இதை வைத்து மீம்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி கூறியதாக ஒரு மீம் வைரலாகி வருகிறது.
அதில் சுவாதி போன்று ஒரு பெண் காதலை ஏற்க மறுத்தால் வீட்டிற்கு சென்று ரிலாக்சாகி அந்த பெண்ணுக்கு பேஸ்புக்கில் நண்பராக வேண்டும். ஆனால் சாட் செய்யமால் உங்கள் திறமையை வளர்த்து அந்த பெண்ணை உங்களின் ரசிகராக்கி, அவர் விருப்பம் தெரிவிக்கும் போது மலை டி அண்ணாமலை என்று கூறி அந்த பெண்ணை Block செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதை நான் சொல்லவில்லை, ஒரு பெண் ஏற்க மறுத்தால் அந்த பெண்ணின் முடிவுக்கு மதிப்பளித்து அந்த இடத்தை வி்ட்டு நகருங்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி தனது டிவிட்டில் கூறியுள்ளார்.
N5




