செய்திகள்

65 ஆயிரம் வீட்டுத் திட்டம்;இன்னமும் இறுதி முடிவு இல்லை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை எந்த நிறுவனத்திடம் கையளிப்பது என்பது தொடர்பாக   அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த திட்டத்தை நிறைவேற்றும் கட்டளையை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி  மற்றும் பிரதமர் தலைமையிலான குழுவொன்ற மீளாய்வு செய்யும் என்று  அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய வம்சாவளி தொழிலதிபரான, லக்ஸ்மி மிட்டலின், அனைத்துலக நிறுவனமான ஆர்சிலர் மிட்டர் நிறுவனத்துக்கு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

n10