செய்திகள்

65,000 வீட்டுத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: வலியுறுத்துகிறார் சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் அர­சாங்­கத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள 65 ஆயிரம் வீடுகள் கொண்ட திட்­டத்­தினை மீள் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டு­மென எதிர்க் கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் நேற்று சபையில் பகி­ரங்க கோரிக்கை விடுத்தார்.

எமது மக்­க­ளுக்கு வீடு­கள் அவ­சிய தேவை­யாக காணப்­ப­டு­கின்றது. அர­சாங்கம் அதற்­காக முன்­னெ­டுக்கும் செயற்­றிட்­டத்தை நாம் எதிர்க்­க­வில்லை. ஆனால் அவை நீண்­ட­காலப் பயன்­பாட்டைக் கொண்­டி­ருப்­பது அவ­சி­ய­மா­னது. உருக்கு உற்­பத்­தி­யா­ளர்கள் தமது கழி­வு­களை போடு­வ­தற்கு இடங்­களை தேடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று வியா­ழக்­கி­ழமை நாட்டின் பொரு­ளா­தாரம் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும்உரையாற்றுகையில்

“வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான திட்­டத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்­றது. எமது மக்­க­ளுக்கு 137 ஆயிரம் வீடுகள் தேவை­யா­க­வுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அவற்றைப் படிப்­ப­டி­யாக முன்­னேற்ற வேண்­டு­மென்ற கோரிக்­கையை நாம் தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரு­கின்ற நிலையில் 65 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருப்­பதை நாம் வர­வேற்­கின்றோம்.

ஏற்­க­னவே இந்­திய அர­சாங்கம் 50 ஆயிரம் வீடு­களை அமைக்கும் பணியை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. இந்­திய அர­சாங்­கத்தின் அந்த செயற்­பாடு வர­வேற்­கப்­பட வேண்­டி­யதாகும். இந்­திய அர­சாங்கம் வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­காக 5 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபாவை இல­வ­ச­மாக வழங்குகின்றது. அந்தப் பணம் போது­மா­ன­தாக அல்ல என்ற கருத்­துக்கள் சிலவும் காணப்­ப­டு­கின்­றன.

எனினும் அப்­ப­ணத்­தி­னூ­டா­கவே வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தையும் அவ­தா­னிக்க முடியும். இவ்­வா­றான நிலை­யில்தான் தற்­போது 65 ஆயிரம் வீடு­களை அமைக்கும் செயற்­திட்டம் முன்னெடுக்­கப்­ப­டு­கின்­றது. இத்­திட்­டத்தின் பிர­காரம் அமைக்­கப்­படும் வீடொன்­றிற்கு 21 இலட்சம் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது.

எற்­க­னவே 6 முதல் 7 இலட்­சத்­துக்­கி­டையில் முழு­மைான வீடொன்றை நிர்­மா­ணிக்க முடி­யு­மென கூறப்­பட்­டுள்ள நிலையில் ஏறக்­கு­றைய அத்­தொ­கை­யி­லி­ருந்து மூன்று மடங்கு அதி­க­ரித்த தொகை­யி­லேயே இவ் வீடு அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

உண்­மை­யி­லேயே இந்த 21 இலட்சம் ரூபா தொகையில் எமது மக்கள் தமது சொந்தமண்ணில் மூன்று தலைமுறை­யினர் வாழக்­கூ­டிய வகையில் கல் வீடு ஒன்றை அமைத்துக் கொள்ள முடியும். சாதா­ர­ண­மாக சகல வச­தி­க­ளையும் கொண்ட கல்­வீ­டொன்றை 10 இலட்சம் ரூபா தொகைக்கு அமைத்துக் கொள்ள முடியும்.

ஆகவே நீடித்­தி­ருக்­க­கூ­டிய வகையில் இந்த திட்டத்தை மாற்­றி­ய­மைக்க வேண்­டு­மென்றே இச் சந்­தர்ப்­பத்தில் கோரிக்கை விடுக்­கின்றேன். இந்­த­வீடு தொடர்­பாக அனு­ப­வம் வாய்ந்த பொறி­யி­ய­ளா­லர்­க­ளி­டத்தில் கலந்­தா­லோ­சித்தேன். அவர்­களின் கருத்­துக்­களை முழு­மை­யாக பெற்றுக் கொண்டு குறித்த வீட்­டுத்­திட்­டத்தின் மாதிரி வீடொன்றை நேரில் சென்று பார்­வை­யிட்­டி­ருந்தேன். தள­பா­டங்கள், மின்­வி­சிறி, ஏனைய உப­க­ர­ணங்கள் சூரிய சக்­தியைப் பெறும் கலம் என பல­வ­ச­திகள் கொண்டு காணப்­ப­டு­கின்­றன.

ஆனால் உருக்கிலான பகு­தி­களில் பொருத்தும் இடங்­களில் இடை­வெ­ளிகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்றின் பாகங்­களை அமைக்­கும்­போது வீடே அசை­கின்­றது. சிவர்கள் விரைவில் உடைந்­து­விடும் நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது. வெப்­பத்தில் எவ்­வாறு அதன் பாது­காப்பு காணப்­படும் என்­பது குறித்து முழு­மை­யான விப­ரங்கள் இல்லை.

குறித்த வீட்டில் பெணணொ­ருவர் இருந்தார். அந்த வீடு தொடர்­பாக கேட்­ட­போது அவர் மகிழ்ச்­சி­யாக தனது கருத்­துக்­களை கூறினார். அவர்­களின் உட­னடித் தேவைக்கு அது­போ­து­மா­ன­தா­க­வுள்­ளது. ஆனால் பரு­வ­கால மாற்­றங்­க­ளின்­போதே வீட்டின் யதார்த்­ததை உணர்ந்து கொள்ள முடியும். அது­மட்­டு­மன்றி அந்த வீட்டை கட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் பொருட்­களை மீளப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யமா என்­பது தொடர்­பா­கவும் புரி­யாத நிலை­மை­யி­லேயே மக்கள் உள்­ளனர்.

அப் பகு­தியில் கட­மை­யி­லி­ருந்த பொறி­யி­ய­லாளருக்கே அவ்­வா­றான வீடுகள் தொடர்­பான தக­வல்­களை அறிந்து கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதை அவ­ரோடு உரை­யா­டும்­போதே அறிய முடிந்­தது. ஆகவே நான் மீண்டும் கூறு­கின்றேன். வீடு­களை எமது மக்­க­ளுக்­காக வழங்க முன்வந்தி­ருப்­ப­தை­யிட்டு அர­சாங்­கத்­திற்க நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கின்றேன். ஆனால் குறை­பா­டுகள் தொடர்பில் கண்­களை மூடிக்­கொண்­டி­ருக்க முடி­யாது.

இத்­திட்டத்­திற்­காக அர­சாங்கம் ஒரு மில்­லியன் டொலர்­களை செல­வி­டு­கின்­றது. அவ்­வா­றான பெருந்­தொகைப் பணத்தை செல­வி­டும்­போது அது பய­னுள்­ள­தாக அமைய வேண்டும். மீளச் செலுத்தும் கடன்­களைப் பெற்றே அர­சாங்கம் இவ்­வா­றான திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றது. ஆகவே குறித்த திட்­டத்­தினை அர­சாங்கம் மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும். இவ்­வா­றான திட்­டங்கள் சமூ­கத்­துடன் சம­மா­ன­வ­கையில் நிலைத்­தி­ருக்­க­கூ­டிய வகையில் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய வகையில் அமைய வேண்டும்.”
R-06