செய்திகள்

69 புதிய எம்.பிக்கள் ஓய்வூதியத்துக்கு தகுதி பெற்றனர்

கடந்த பாராளுமன்ற தேர்தலினூடாக முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான சகல புதிய உறுப்பினர்களும் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுவதற்கான தகுதியை பூர்திசெய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ச்சியாக 5 வருட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பாராயின் அவர் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுவதற்கான தகுதி பெற்றவராக கருதப்படும் இதன்படி கடந்த தேர்தலில் புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவான 69 உறுப்பினர்கள் அதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.
கடந்த 22ம் திகதியுடன் தற்போதைய பாராளுமன்றத்திற்கு 5 வருடங்கள் பூர்த்தியாகிய நிலையிலேயே அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  22ம் திகதிக்கு  முன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்த வாய்ப்பை இழந்திருப்பர். இந்நிலையில் புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த பின்னர் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படக் கூடாது என வேண்டிக்கொண்டிருந்த எம்.பிக்கள் இனி எப்போது பாராளுமன்றத்தை கலைத்தாலும் பராவாயில்லை என்கின்றனராம்.