செய்திகள்

72 வயது பெண்ணை வல்லுறவுக்குற்படுத்திய 60 வயது நபர் தப்பியோட்டம்

வீட்டில் தனிமையிலிருந்த 72 வயதுடைய வயோதிப பெண்னொருவரை 60 வயதுடைய நபரொருவர் பாலியல் வல்லுறவுக்குற்படுத்திய சம்பவமொன்று சிலாபம் பல்லம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரனைகளை நடத்தி வருகின்றனர்.

குறித்த பெண் இரவு நேரத்தில் வீட்டில் தனிமையில் இருந்த போது அங்கு சென்றுள்ள நபர் வீட்டின் கதவை தட்டிய நிலையில் அந்த பெண் கதவை திறந்த போது அந்த நபர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் பல்லம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து அவர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.