செய்திகள்
730 ரூபா சம்பளம் , வருடத்திற்கு 300 நாள் வேலையுடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானது : நிலுவை வழங்கப்படாது
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்ததம் சற்றுமுன்னர் கைச்சாத்தாகியுள்ளது.
வருடத்திற்கு 300 நாட்கள் வேலை என்ற அடிப்படையில் நாளாந்தம் 730 ரூபா சம்பளம் என்ற ரீதிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 18 மாதங்களுக்கான நிலுவை கொடுப்பனவு இன்றியே ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளனர். -(3)




