8 ம் திகதி அமெரிக்காவிற்கு ஓரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்
பிபிசி
மிக நீண்ட கடும் உராய்வுகளுடனான தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வருகின்றது.அமெரிக்க மக்கள் அடுத்தது என்னவென்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் காரணமாக அரசியல்வேறுபாடுகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
அமெரிக்காவின் அதிகளவு மக்கள் டிரம்பினை தடித்ததோல் உடையவராக, உண்மை என்னவென்பதை அறியதாவராக, சர்வதேச விவகாரங்கள் குறித்து எதனையும் அறியதவாரக கருதுகின்றனர். மற்றையவர்களை தாக்குவதில் விருப்பம் உடையவர் டிரம்ப் என்ற கருத்தும் காணப்படுகின்றது.
மற்றைய பகுதியினர் ஹிலாரி ஓரு பொய்யர்,சுயநலம் மிக்கவர், வாசிங்டனின் ஊழல் அரசியலின் ஓரு பகுதி என கருதுகின்றனர்.
அதேவேளை மில்லியன் கணக்கான வாக்காளர்கள் டிரம்ப் மாற்றங்களை கொண்டுவரக்கூடியவர் என கருதுகின்றனர்.அவர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்,குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைப்பார்,அமெரிக்காவின் பெருமையை மீட்டுத்தருவார் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேவேளை ஹிலாரியை புத்திசாலியாகவும் தாராளவாத விழுமியங்களை பாதுகாப்பவராக கருதுபவர்களும் உள்ளனர்.
எனினும் பெருமளவு அமெரிக்கர்கள் தாங்கள் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட விதம் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக கருதுகின்றனர்.தேர்தல் பிரச்சாரங்கள் ஆபசமானவையாக காணப்பட்டன. ஹிலாரியும், டிரம்பும் மற்றையவர்களின் பலவீனத்தை தங்கள் பலமாக பயன்படுத்தியதை காணமுடிந்தது, பல தடவைகளில் டிரம்பின் பிரச்சாரகுழுவின் கதை முடிந்து விட்டது என ஹிலாரி அணியினர் கருதினர் ஆனால் ஓவ்வொரு முறையும் டிரம்ப் எழுந்துவந்தார்.
தன்னுடைய மின்னஞ்சல்கள் குறித்த அவதானமின்மையிலிருந்து ஹிலாரியால் தப்ப முடியவில்லை, அது ஹிலாரியை மோசடிபேர்வழி, பொய் சொல்பவர் என டிரம்ப் குற்றம்சாட்டுவதற்கு வழிவகுத்தது.

ஹிலாரியை விட டிரம்பிடம் தனது மக்களிற்கான வலுவான ஆனால் சுலபமான செய்தியிருந்தது-அமெரிக்காவை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டுவரலாம் என்பதே அது.
ஹிலாரியிடம் அறிவும், விடயமும் அதிகமாக காணப்பட்டாலும் மக்களை கவரக்கூடிய சொல்லாடலை அவரால் முன்வைக்க முடியவில்லை.
செவ்வாய்கிழமை வாக்களிப்பு முடிவடைந்தவுடன் அனைத்தும் முடிவடைந்துவிடாது- தேர்தல் பிரச்சாரம் ஏற்படுத்திய பிரிவினை நீங்கிவிடாது.
டிரம்பின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தாங்கள் ஹிலாரி வென்றாலும் அவரை ஏற்கப்போவதில்லை என தெரிவிக்கின்றனர். மேலும் ஹிலாரி வெற்றிபெற்றால் டிரம்ப் அவரை பாராட்டி வாழ்த்துவாரா என்பதே சந்தேகமாகவுள்ளது.
ஹிலாரி ஜனாதிபதியானாலும் அவரை விசாரணை செய்வோம் என அமெரிக்க காங்கிரஸை தங்கள் பிடியில் வைத்துள்ள குடியரசுக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவிற்கு செவ்வாய்கிழமை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாள்- கடுமையாக விமர்சிக்கப்படும் தனது முதலாவது பெண் ஜனாதிபதியை தெரிவுசெய்வதா அல்லது அரசியல் பதவிகள் எதனையும் வகிக்காத பலரால் ஆபத்தானவர் என கருதப்படுபவரை தெரிவுசெய்வதா என்ற நபரை தெரிவுசெய்வதா என்ற நிலையில் அமெரிக்கா காணப்படுகின்றது.
செவ்வாய்கிழமை 8 ம் திகதி அமெரிக்காவிற்கு ஓரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.




