8 வருடங்களின் பின் வெளியான மகிந்த – லசந்த விக்கிரமதுங்கவின் தொலைபேசி உரையாடல்
8 வருடங்களுக்கு முன்னர் சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குரல் பதிவொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் கொலை செய்யப்பட்டு 8 வருடங்களின் பின்னர் இவ்வாறான குரல் பதிவொன்று வெளியாகியுள்ளமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
சிங்களத்தில் நடைபெற்றுள்ள இந்த உரையாடலில் தான் ஒரு வாரத்திற்கு முன்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறுகின்றார். இதனை அடிப்படையாக கொண்டு குறித்த உரையாடல் 2008ஆம் ஆண்டில் நடந்ததாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஸ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு 2008ஆம் ஆண்டு மே மாதமே சென்றிருந்தார்.
முழு உரையாடல் குரல் பதிவுகளையும் கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் -(3)
https://www.youtube.com/watch?v=IfRKK11Dw0M




