செய்திகள்

80 பயணிகளுடன் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள்

எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து கெய்ரோ சென்ற விமானம் 80 பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அலெக்சாண்டிரியாவில் இருந்து இன்று நண்பகலில் 80 பயணிகளுடன் எகிப்தியன் ஏர்லைனர் விமானம் கெய்ரோ சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த பயங்கரவாதிகள் விமானத்தை சைப்ரஸுக்கு கடத்திச் சென்றனர். இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் விமானம் சைப்ரஸில் உள்ள லார்நக்கா விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தரையிறக்கினர். விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து விமான பயணிகளை மீட்க பயங்கரவாதிகளுடன் எகிப்து அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

n10