செய்திகள்
800 ரூபாய் அடிப்படை சம்பளம் கோரி மலையகத்தில் துண்டு பிரசுரம்
தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 800 ரூபாவை கொடுக்க வேண்டும் என முதலாளித்துவ சம்மேளனத்தை வழியுறுத்தும், மக்களை தெளிவூட்டும் துண்டு பிரசுர விநியோகம் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இன்று ஹற்றன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, நானுஓயா, நுவரெலியா, ராகலை போன்ற தலைநகரங்களில் விநியோகிகப்பட்டது.