செய்திகள்

82 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடுஇமருதமடு குளம் அருகில் மன்னார் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொ.கொ.83790 விபுர்த்தி உத்தியோகத்தருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் டீசிடீபி பொலிஸ் உத்தியோகத்தர்களால் கேரளாகஞ்சா 82 கிலோ 840 கிராம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இது தொடர்பாக சந்தேக நபர் இருவர் கேடீஎச் வேன்இ2 மோட்டார்சைக்கில் இரண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ்.சந்திரபாலவின் பணிப்பில்இ பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.பி.கேரத் அவர்களின் வழிகாட்டலில் மன்னார் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சி.பி.ஜயதிலகஇ மாவட்ட குற்றதடுப்பு பொறுப்பதிகாரி பொ.ப .ரத்னாயகஇபொ.சா.36501 ரத்னமணல தலைமையிலான அணியினரே மேற்படி கேரளாகஞ்சாவையும் சந்தேக நபர்களையும் கைது செய்தள்ளனர்.

இதில் சந்தேகநபர்கள் இருவரும் பேசாலை மற்றும் புதுகுடியிருப்பு முல்லைதீவு பகுதியை சேர்ந்த36இ23வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதுஇ

மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

-(3)